Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 March 2021

ஓட்டுச்சாவடிக்கு கொரோனா கிட்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 13 பொருட்கள் அடங்கிய, 'கொரோனா கிட்' வழங்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பணி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடன் நடந்து வருகிறது. தேர்தல் பணியாளர், சமூக இடைவெளியுடன் பணியாற்றும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 1,000 வாக்காளர்கள் வரை வந்து செல்வர் என்பதால், கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 'தெர்மல் ஸ்கேனர்', ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகள்; வாக்காளர் மற்றும் தேர்தல் பணியாளர் பயன்படுத்த, 'சானிடைசர்' பாட்டில்கள்; முக கவசம்; முழு கவச ஆடை; அவற்றை அப்புறப்படுத்தும் காகிதங்கள் உட்பட, 13 வகை பொருட்கள் அடங்கிய, கொரோனா கிட் வழங்கப்பட உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'மாநில அளவில், அனைத்து பொருட்களையும் சேர்த்து, கொரோனா கிட் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொகுதி வாரியாக பிரித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES