Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 March 2021

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

செவ்வாழையின் மருத்துவ குணங்கள

செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.



கண்களுக்கு ஆரோக்கியம்

விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்பார்வை ‌கோளாறுகள் அதிலும் மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பார்வைத்திறன் மேம்படுகிறது தினமும் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழம் என்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.

தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்...

மாலைக்கண் நோய்

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

பல் நோய்கள்

செவ்வாழைப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பல்வலி, பல் வேர்கள் வலுவிழந்து ஆடுதல் போன்ற வியாதிகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் தான் வியாதிகளுக்கு அஸ்திவாரம் நார்ச்சத்து மிகுந்த செவ்வாழைப் பழம் மலச்சிக்கலை போக்கும். செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம். மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.

மலட்டுத்தன்மையை நீக்கும்

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் இருவரும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் விந்தணுக்கள் பெருகி கர்ப்பம் ஏற்படலாம்.

ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை தன்னகத்தே கொண்டுள்ளதால் செவ்வாழைப்பழம் உண்ணும் போது எலும்புகள் வலுவடையும். அதனால் தான் எல்லா வயதினருக்கும் ஏற்ற கனி என்கிறோம்.   வளரும் குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

உடல் எடையை பராமரிக்க

செவ்வாழையில் கலோரிகள் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காலை உணவாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி மட்டுப்படும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

நேர்எதிர் பலன்களை கொண்டுள்ள கனி செவ்வாழைப்பழம் தான். செவ்வாழைப்பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

நரம்புத் தளர்ச்சி நீங்க

நரம்புத் தளர்ச்சி மனிதனை செயலற்று போக வைத்து விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும்.சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். 

நரம்பு தளர்ச்சி காரணமாக, ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைவு ஏற்படும், தாம்பத்தியம் பாதிக்கப்படும் இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப்பழம்.

பலரும் அரிதாகவே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

“வைத்தியருக்கு கொடுக்கும் காசை, வாணிகனுக்கு கொடு “, என்பது போல இதன் விலையைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் கண்ணில் படும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுங்கள்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES