Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 January 2021

RTI சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை காரணத்தையும் குறிப்பிட உத்தரவு

RTI-ல் தகவல் பெற திடீர் நிபந்தனை!




தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற திடீர் நிபந்தனை : தகவல்களை கேட்பவர்கள் அதற்கான காரணத்தையும் குறிப்பிட உத்தரவு

டெல்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் நோக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனம் தொடர்பாக ஹரி கிஷன் என்பவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.குடியரசு தலைவர் மாளிகையில் பணி நியமனம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஹரி கிஷன், தமது விவரங்கள் குறித்து குறிப்பிடாததால் மத்திய தகவல் ஆணையம் 25,000 ரூபாய் அபராதம் விதித்து இருந்தது.

இதனை எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விண்ணப்பதாரரின் மகள் குடியரசு தலைவர் மாளிகையில் பணி வாய்ப்பிற்காக விண்ணப்பித்த இருந்த விவரத்தை குறிப்பிடவில்லை. அவரது மகள் பணி வாய்ப்பு பெற முடியாததால் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மற்ற விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற விண்ணப்பித்து இருப்பது தெளிவானது. எனவே விண்ணப்பதாரர் உள் நோக்கத்துடன் தகவல் ஆணையத்தை அணுகி இருப்பது தெளிவாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டு மத்திய தகவல் ஆணையத்தின் நடவடிக்கை சரியானது என்று தான் தீர்ப்பளித்துள்ளார். இதனிடையே குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பணி நியமனத்தில் 10 பேர் போலிச் சான்றிதழ்களுடன் பணி வாய்ப்பு பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES