Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 January 2021

டெல்லி வன்முறையில் தனியாக சிக்கிய போலீசை விவசாயிகள் சிலர் பாதுகாத்து காப்பாற்றிய வீடியோ

கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!




டெல்லி வன்முறையில் போராட்டக்காரர்களிடையே தனியாக சிக்கிய போலீசை விவசாயிகள் சிலர் பாதுகாத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. 12 மணிக்கு முன்பே விவசாயிகள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்ததாகவும் அதனால் தள்ளுமுள்ளுவில் தொடங்கிய வன்முறை பின்னர், தடியடி, கண்ணீர் குண்டு வீசி விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.



இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் போலீசார் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே செல்வதாகவும் வேண்டுமென்றே வன்முறை தூண்டுவிடப்படுவதாகவும் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளன

தொடர்ந்து வெடிக்கும் வன்முறையால் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகள் சிலர் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நாங்லோயில் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள்.

மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓவில் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் டிராக்டர்களை போலீசார் மீது மோதும் விதமாக தாறுமாறாக ஓட்டிச்சென்று அச்சுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் தேசிய தலைநகரின் ஐ.டி.ஓ பகுதியில் டி.டி.சி பேருந்தை சேதப்படுத்தினர்.

இத்தகைய போராட்டங்களும் வன்முறைகள் நடைபெற்றாலும் இதற்கு மத்தியில் போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரகள் மத்தியில் தனியாக சிக்கிக்கொண்டார். அவரை மீட்ட விவசாயிகள் சிலர் எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!

மத்திய அரசு அமல்படுத்திய புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகிறது. சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை செங்கோட்டையை விற்று செல்லப்போவதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையில் முகப்பு பகுதியில் உள்ள சிறிய கொடிக்கம்பத்தில் விவசாய சங்கங்களின் கொடியும் ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES