Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 January 2021

11 மாவட்டங்களில் இன்றும்,நாளையும் கன மழை -வானிலை ஆய்வு மையம்

11 மாவட்டங்களில் இன்று, நாளை மழை

தமிழகத்தில், இன்றும் 13.01.21, நாளையும், 11 மாவட்டங்களில், கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வெளியிட்ட அறிவிப்பு:குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், இன்று ராமநாதபுரம், கடலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.


தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், பெரும்பாலும் மிதமான மழையும் பெய்யும்.நாளை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.

வரும், 15 மற்றும், 16ம் தேதிகளில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி, வேதாரண்யத்தில், 18 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES