Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 December 2020

UPSC வேலைவாய்ப்பு 2020.. தேர்வு கிடையாது,INTERVIEW POST



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.




மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

. அதில் இளைய அறிவியல் அலுவலகம், இயக்குநர் (பாதுகாப்பு), துணை கண்காணிப்பாளர் தொல்பொருள் பொறியாளர் மற்றும் பல (Junior Scientific Office, Director (Conservation), Deputy Superintending Archaeological Engineer and others) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு:

மத்திய அரசு பணிகளுக்கு என 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 33 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

யு.பி.எஸ்.சி. கல்வித்தகுதி:விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிகளில் குறைந்தபட்சம் 06 முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கேற்ப கல்வி தகுதியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

UPSC தேர்வு செயல்முறை :

நேர்முக செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.01.2021 அன்றுக்குள் https://www.upsconline.nic.in/ என்ற ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிக்கு 
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.






No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES