நீட் , ஜெஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் - மத்திய அமைச்சர்

டெல்லி: அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20 சதவீதம் வரை குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான ( 2020 - 2021 ) நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் விரைவில் நடத்தப்படவிருக்கிறது. வருகின்ற 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இத்தேர்வுகள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டம் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருக்கிறார்.
இன்று இணையவழியில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இத்தகவலை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு சி.பி.எஸ்.சி. பாடத்திட்டமானது 20 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, மாணவர்கள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், அவரவர் மாநிலங்களில் பயிற்றுவிக்கக்கூடிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் போட்டி தேர்விற்கு தயாராகி வருகின்றனர். நீட் மற்றும் ஜே.இ.இ. பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்த கோரிக்கைகளை பரிசீலித்து தற்போது நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டமானது 10 முதல் 20 சதவீதம் வரை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சூழலை பொறுத்து நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலானது நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மத்தியில் சற்று நிம்மதி அளித்துள்ளது.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற   https://t.me/kalvitamilnadu    இந்த இணைப்பை க்ளிக் செய்யவும், , 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE