Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 December 2020

ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? (PHH, PHH - AAY: NPHH-NC NPHH NPHH-S )

ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?


தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.

PHH,

PHH - AAY:

NPHH-NC

NPHH

NPHH-S



🤞 PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.


🤞 PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


🤞 NPHH-NC: ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.


🤞 NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில்
NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.


🤞 NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.





No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES