Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 December 2020

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டம்...!

அலுவலகம் / துறையின் பெயர் / முகவரி:-

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம்), எண்.164, எம்.எம்.பிளாசா, இரண்டாம் தளம், திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர்-621212

துறைத்தலைவரின் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி விபரம்
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், சமூகப்பாதுகாப்புத்துறை, தொடர்பு எண். 04328-275020, மின்னஞ்சல் முகவரி : dcpsperambalurtn@gmail.com.

நோக்கம்:-

பாதுகாப்பற்ற சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் அத்துமீறல், புறக்கணிப்பு, விட்டுவிடுதல் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்துதல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவா்களின் மறுவாழ்விற்கு தேவையான பங்களிப்பினை அளித்தல்.



திட்டங்கள் / இலக்கு மக்கள் / திட்டத்தில் பயன் பெற தேவையான ஆவணங்கள்:-

நிதி ஆதரவு திட்டம்:

குழந்தைகளின் மருத்துவம்> ஊட்டச்சத்து> கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.

இலக்கு மக்கள்:-

0 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்
கிராமப்புறத்தில்> ரூ.24000/- நகர்ப்புறத்தில் ரூ.30000/- பெருநகரங்களில் ரூ.36000/- ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.

மத்திய மாநில அரசுகளின் வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறாத குழந்தைகள்.

குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியுள்ள நிலையில்> குடும்பம் சார்ந்த பராமரிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ள குழந்தைகள்.




கீழ்க்கண்ட வகைப்பாட்டிலுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:-

விதவை தாய்மார்களின் குழந்தைகள்
தொழுநோய் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
சிறைவாசிகளின் குழந்தைகள்.

நிதி விபரங்கள்:-

ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- வீதம் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மூன்று வருடங்கள் நிறைவு அல்லது 18 வயது பூர்த்தியடையும் நாள்> (விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர) இதில் எது முன்னர் நிகழ்கிறதோ அதுவரை மாதம் ரூ.2000/- மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

நிதி ஆதரவு உதவித்தொகை பெற கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:-

மனு (பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1)
கல்விச்சான்று
வருமானச்சான்று
குழந்தையின் வங்கிகணக்கு புத்தகத்தின் நகல்
குழந்தை / பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
தாய் / தந்தை இறந்திருப்பின் இறப்புச்சான்று நகல்
தாய் / தந்தை / குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களின் நகல்.
குழந்தை தொடர்பாக வேறு ஏதேனும் ஆவணங்கள் இருப்பின் அவற்றின் நகல்.

வளர்ப்பு பராமரிப்பு:-

குழந்தை நலக்குழுவின் ஆணையின் படி ஒரு குழந்தை, தான் பிறந்த குடும்பம் அல்லாத வேறு ஒரு குடும்ப சூழலில்; தற்காலிகமாக பராமரிக்கப்படுவது வளர்ப்பு பராமரிப்பு ஆகும்.

இலக்கு மக்கள்:-

குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியுள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்.

தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்> தங்கள் குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை எனவும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்குமாறும் குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு விண்ணப்பித்த பெற்றோர்களின் குழந்தைகள்.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகள் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகள்.
தாய் தந்தை இருவருமோ அல்லது எவரேனும் ஒருவர் சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள்.

உடல் ரீதியான> உணர்வு ரீதியான> பாலியல் ரீதியான> இயற்கை பேரழிவு> உள்நாட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.

நிதியுதவி:-

வளர்ப்பு பராமரிப்பில் உள்ள குழந்தையை பராமரிக்க நிதியுதவி தேவைப்படின்> குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.2000/- மட்டும் வழங்கப்படும்.

வளர்ப்பு பராமரிப்பு குறித்த மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்:

http://www.wcd.nic.in/acts/model-guidelines-foster-care-2016


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES