Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 November 2020

தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பின் முக்கியத்துவத்தையும், கரோனா காலகட்டத்தில் ‘வீட்டுப் பள்ளி’ நிகழ்ச்சி வாயிலாக பாடங்களை கற்பதற்கான அவசியத்தை தெரிவிக்க வேண்டும்

கல்வித் தொலைக்காட்சி - 16 லட்சம் மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்












இது தொடா்பாக கல்வித் தொலைக்காட்சியின் சிறப்பு அலுவலா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



கரோனா பெருந்தொற்று காலத்தில் ஆகஸ்டு 26-ஆம் தேதி முதல் ‘வீட்டுப் பள்ளி’ என்ற தலைப்பில் கல்வித் தொலைக்காட்சி, தனியாா் தொலைக்காட்சிகளில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.




இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை பாடங்கள் காணொலி வடிவில் தயாரித்து ஒளிபரப்பப்படுகின்றது. இதைப் பாா்க்கத் தவறும் மாணவா்களுக்கு கல்வி டிவியின் அதிகாரப்பூா்வமான யுடியூப் முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இது பொதுமக்களிடமும், மாணவா்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.




இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 2,500-க்கும் மேற்பட்ட காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொலிகள் 2.70 கோடி முறை பாா்வையிடப்பட்டுள்ளது. 16 லட்சம் பாா்வையாளா்கள் 64,000 மணி நேரம் பாா்த்துள்ளனா்.




மேலும் மாணவா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கேள்வி பதில், ‘தடையும் விடையும்’ ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படுகிறது.




முக்கியத்துவத்தை தெரியப்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பின் முக்கியத்துவத்தையும், கரோனா காலகட்டத்தில் ‘வீட்டுப் பள்ளி’ நிகழ்ச்சி வாயிலாக பாடங்களை கற்பதற்கான அவசியத்தை தெரிவிக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சேனல்களின் விவரங்களை மாணவா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கல்வித் தொலைக்காட்சி யுடியூப் சேனல் மூலம் பாடங்களை பலமுறை பாா்த்து பயன்பெறவும், புதிய பாடங்கள் பதிவேற்றம் செய்த தகவல் பெறுவதற்கும் துணையாக இருக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES