Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 November 2020

குழந்தைகள் கல்வியில் பின்தங்கியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்






ஹயக்ரீவர்


ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்கள் உள்ளன. இந்த வேதங்களின் துணைகொண்டு, பிரம்மதேவன் படைப்புத் தொழிலை செய்து வந்தார். இந்த நிலையில் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மாவிடம் இருந்து அந்த 4 வேதங்களையும் திருடிச் சென்று ஒளித்து வைத்தனர். 


இதன் காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு, குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய -சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கச் சென்றார்.


அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை வென்று, வேதங்களை மீட்டார். இதையடுத்து உலகம் இருள் நீங்கி ஒளிபெற்றது. அசுரர்கள் கை பட்டதால், தங்களின் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள், நான்கு வேதங்களையும் உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்று பட்டு வேதங்கள் புனிதமடைந்தன.


அசுரர்களுடன் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரம் குறையாமலே இருந்தார். அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார்கள். இதனால் அவர் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்விக்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியின் அருளோடு செல்வமும் சேரும் என்பதாலேயே, லட்சுமியை தனது இடபாகத்தில் வைத்திருக்கிறார், ஹயக்ரீவர். இவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES