Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

27 November 2020

தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை- முதல்வர் பழனிசாமி மகிழ்ச்சி

அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே "தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு" தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.


இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம்!




2020ம் ஆண்டிற்கான பெரிய மாநிலங்களுக்கான இந்தியா டுடே விருதை தமிழ்நாடு மாநிலம் 2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதல் இடத்தை பெற்றுள்ளது. 

 மேலும் இந்த விருதை தமிழ்நாடு அரசு தொடர்ந்து 2018 முதல் 2020 வரை மூன்றாவது முறையாக பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.இந்த விருதானது கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதிலும், வணிக சூழல் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து விருது வழங்கப்படுகிறது.


 மேலும் மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி, உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆளுமைத் திறன், தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகிய வகைப்பாடுகளின் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்படுகிறது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES