Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

05 November 2020

வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு.

வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு...

15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு

அதிலும் தற்போது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் உங்களால் சற்று குறைந்த வட்டியில் கட்ட முடிக்க முடியும். ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்த நிலையில், இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளன. அதோடு வங்கிகளும் விழாக்கால சலுகையாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சலுகை, செயல்பாட்டுக் கட்டணம் ரத்து என பல அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன.

கட்டணங்களில் சலுகை

ஏற்கனவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ள நிலையில், வீடு கட்ட நினைப்போருக்கு நிச்சயம் இது வரபிரசாதம் தான். தற்போது எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால், சில வங்கிகள் மற்ற கட்டணங்களிலும் சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் உள்ளன.

டெவலப்பர்களும் சலுகை

இது தவிர கடந்த சில மாதங்களாக முடங்கிபோன டெவலப்பர்களின் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆக இதெல்லாம் சேர்த்து உங்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற சரியான வாய்ப்பாக அமையும். சரி வாருங்கள் பார்க்கலாம் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மற்ற கட்டணங்கள் எவ்வளவு, என்னென்ன சலுகைகள், விவரங்கள் என்ன?

எஸ்பிஐ-யில் எவ்வளவு வட்டி?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் தற்போது விழாக்கால பருவத்திற்காக பற்பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. தற்போது 30 லட்சம் வரையிலான கடனுக்கு 6.90% வட்டி விகிதமும், இதே 30 லட்சம் ரூபாய்க்கு மேலான கடனுக்கு 7% வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் இந்த வீட்டுக்கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை வரை சலுகை பெற முடியும்.

விழாக்கால சலுகை காரணமாக வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகைகாக எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது தான், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.


இதற்கு முன்பு மூன்று கோடி வரையிலாக வீட்டுக்கடனுக்கு 8 மெட்ரோ நகரங்களில், 10 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்பட்டும் வந்தது. இதில் கூடுதலாக யோனோ ஆப் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கோடக் மகேந்திரா வங்கியில் என்ன சலுகை?

கோடக் மகேந்திரா வங்கியினை பொறுத்த வரையில், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 6.9% முதல் வட்டியினை பெறலாம். மற்ற வங்கியில் இருந்து கடன் தொகையை கோடக் வங்கிக்கு மாற்றினால், அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கூட தொகையை சேமிக்க முடியும் என்கிறது இவ்வங்கி. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம்?

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக்கடன் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகள் குறைத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தது. இது ஒவர்நைட் MCLR விகிதம் 6.65% ஆகவும், 1 மாதம் எம்சிஎல்ஆர் விகிதம், 7.10% ஆகவும், 3 மாதங்களுக்கு 7.25% ஆகவும், இதே 6 மாதங்களுக்கு 7.35% ஆகவும், 1 வருடத்திற்கு 7.50% ஆகவும் வழங்கப்படுகிறது.

யூனியன் வங்கியில் எவ்வளவு வட்டி?

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 30 லட்சம் மேலான வீட்டுக்கடனுக்கு 10 அடிப்படை புள்ளிகளை இவ்வங்கி குறைந்துள்ளது. இதில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக, கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பு செய்யப்படும் எனவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்களுக்கு யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7%ல் இருந்து ஆரம்பிக்கிறது. அதோடு செயலாக்க கட்டணம் என்பது டிசம்பர் 31 வரையில் கிடையாது எனவும் அறிவித்துள்ளது.

தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?

ஆக்ஸிஸ் வங்கியினை பொறுத்த வரையில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.9%இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதே போல ஹெச்டிஎஃப்சியிலும் வாடிக்கையாளார்களுக்கு வருடத்திற்கு 6.9% வட்டி விகிதத்தில் இருந்து கிடைக்கும். இவ்வங்கி கடன் தொகையில் 0.5% செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது. இந்த கட்டணம் ரூ.3,000 வரை இருக்கலாம். இதே போல ஐசிஐசிஐ வங்கியிலும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.95% முதல் ஆரம்பிக்கிறது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES