Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 November 2020

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 1,248 குறைந்தது




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4,922 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹156 குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹39,376-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 1,248 குறைந்து ₹38,128-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4766 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 71.00 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 4.10 குறைந்து ₹ 66.90 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் தங்கம் விலை உயந்தது.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 1,248 குறைந்தது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES