Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

31 October 2020

புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் மையம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

புதிய வயது வந்தோர் கல்வி திட்டம்

புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் மையம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

*15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களை சேர்க்க வேண்டும். அந்தந்த பள்ளியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவு இல்லாத அவர்களுடைய பட்டியலை முதலில் தயார் செய்ய வேண்டும்.இதற்கு அருகில் உள்ள அங்கன்வாடிமையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட களப்பணியாளர்களிடம் உள்ள பதிவேடுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குறைந்தது 20 நபர்கள் இருக்க வேண்டும்.

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்.

பாடம் நடத்த தன்னார்வலர் ஒருவரை பள்ளி மேலாண்மை குழு மற்றும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள்,தொண்டு நிறுவனங்கள்,JRC,SCOUT,NSS போன்ற அமைப்புகளில் பணிபுரியும் மாணவமாணவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். தன்னார்வலர்கள் முன்வராத பட்சத்தில் ஆசிரியர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் அந்தந்த பகுதியில் நடைபெறும் பயிற்சி வகுப்பிற்கு ஆசிரியர்களே மேற்பார்வையாளராக செயல்படுவார்கள்.

* தன்னார்வலர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தன்னார்வலருக்கு மதிப்பூதியம் கிடையாது.

* சிறப்பாக செயல்பட்டு தங்கள் மையத்தில் அதிக நபர்களை தேர்ச்சி அடையச்செய்யும் தன்னார்வலருக்கு இறுதியில் மாவட்ட ஆட்சியர் அவருக்கு விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்குவார்.

05.11.2020 க்குள் தன்னார்வலர் மற்றும் கற்போர் தேர்ந்தெடுக்கப் பட்டு பட்டியல் அனுப்ப வேண்டும்.

23.11.2020 அன்று வகுப்பு துவங்கப்பட வேண்டும்.

* தன்னார்வலருக்கு முறையான பயிற்சி 18.11.2020 & 19.11.2020 அன்று வழங்கப்படும். கற்போருக்கு நவம்பர் மாதம் 10 மணி நேரமும் டிசம்பர் மாதம் 40 மணிநேரம் ஜனவரி மாதம் 40 மணிநேரம் பிப்ரவரி மாதம் 30 மணி நேரம் என ஆக மொத்தம் 120 மணி நேரம் வகுப்புகள் நடைபெற வேண்டும். கற்போர் மையத்திற்கு வர இயலாத சூழலில் அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் 2 மணிக்கு தலைமையாசிரியருக்கு இது குறித்த கூட்டம் நடைபெறும். மாவட்ட கல்வி அலுவலரின் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மையம் பார்வை இடப்படும். மையத்தின் செயல்பாடு குறித்த Review கூட்டம் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும். அரசின் இந்தத் திட்டம் முழு வீச்சில் நடைபெற ஆசிரியர்கள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.

கற்போருக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை தேர்வு நடத்தப்படும்.

* திட்ட காலம் முடிவடைவதற்குள் மையத்தில் உள்ள அனைத்து நபர்களையும் தேர்ச்சி அடையச்செய்யவேண்டும்.

* ஆய்வு அலுவலர்கள் மாதம் குறைந்தபட்சம் 20 மையங்களை பார்வைஇட வேண்டும்.

 இது சார்பாக விரைவில் Mobile App தொடங்கப்பட உள்ளது.

*கற்பித்தல் கட்டகங்கள் மையங்களுக்கு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES