Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

26 October 2020

பணிவரன்முறை - தகுதிகாண் பருவம் விளக்கங்கள்



பணிவரன்முறை - தகுதிகாண் பருவம் விளக்கங்கள் 

TRB appointment இல்..நியமன ஆணையில்
"முறையான நியமனம்" என்றிருந்தால் பணிவரன்முறை ஆணை தனியாக தேவை இல்லை..

எ.கா 2002 PG Appointments)...

2003 முதல் 2017 வரை வழங்கப்பட்ட பொதுவான பணிவரன்முறை ஆணைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது

பதவி உயர்வை...பொறுத்தவரையில் கட்டாயம்...தனியாக பணிவரன் முறை செய்யப்பட வேண்டும்...(நியமன அலுவலர் மூலம்)...
முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், CEO வழியாக.. JD (HS) க்கு அனுப்பி பணிவரன்முறை பெறப்பட்டது...

தற்போது முதன்மை கல்வி அலுவலர் (அரசாணை 101 நாள் 18/05/18 இன் படி) நியமன அலுவலர் என்ற முறையில் பணிவரன்முறை செய்வார்கள்..

நேரடி நியமன பொது பணிவரன்முறை போன்று ..
01.01.20xx.... இன் படி பதவி உயர்வு பெற்றவர்கள் அனைவருக்கும் பொதுவான பணிவரன்முறை ஆணை இருக்காது

தகுதி காண் பருவம்
1) நேரடி நியமன முதுகலை ஆசிரியர்களுக்கு பணியேற்பு நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் தகுதி காண் பருவம்...

2) பதவி உயர்வு முதுகலை ஆசிரியர்களுக்கு ...தகுதி காண் பருவம் கட்டாயம் உண்டு... 
பதவி உயர்வு பெற்ற நாளில் இருந்து ஓர் ஆண்டு தகுதி காண் பருவம்..

.தகுதி காண் பருவம் நிறைவு ஆணை CEO வழங்குவார்..

ஒரு பணித்தொகுதியில் ஒரு முறை மட்டுமே தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்....

பதவி உயர்வில் தகுதி காண் பருவம் தேவையில்லை என்பது அடிப்படை விதி பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டாம் தடவையாக "தகுதி காண் பருவம்"... ஏன்?
(ஏற்கனவே அவர் பட்டதாரி பணியில் தகுதி காண் பருவம் நிறைவு செய்துள்ளார்)..

ஒரே பணித் தொகுதி பதவி உயர்வு எனில் மீண்டும் தகுதி காண் பருவம் தேவையில்லை..

ஓர் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்...
பட்டதாரி ஆசிரியர் பணியில் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...
ஏனெனில் இரண்டும் ஒரே பணித் தொகுதி...

பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் வெவ்வேறு பணித் தொகுதிகள் ...
எனவே பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால்..கட்டாயம் "தகுதி காண் பருவம் நிறைவு செய்ய வேண்டும்"
( ஆனால் ஓர் ஆண்டு மட்டுமே தகுதி காண் பருவம்)..
அதே பட்டதாரி ஆசிரியர்..உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் "தகுதி காண் பருவம்" தேவை இல்லை...காரணம் இரண்டும் ஒரே பணித் தொகுதி...

(இணை இயக்குநர் மேநிக அவர்களால் அனுப்பப்பட்டது...
தற்போது முதன்மை கல்வி அலுவலர் தான் பணிவரன் முறை செய்வார்கள்)

Dear All, Share your WhatsApp Group

CLICK TO 

👉👉 Join WhatsApp Group


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES