Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 October 2020

பள்ளிகளில் 30.9.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்

பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்.


அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 30.9.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகள்.

1 ) பார்வை 6 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள் ஆணைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது

இவ்வாணையில் , தொடக்கக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 30.09.2020 அன்றைய நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது . அரசாணை ( நிலை ) எண் .231 பள்ளிக் கல்வித் துறை நாள் 11.08.2010 ல் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி , ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படும்போது அரசாணை ( நிலை ) எண் 201 பள்ளிக் கல்வி ப.க .52 த் துறை நாள் 20.12.2018 இல் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் .

2 மேற்படி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் , EMIS இணையதளப்பதிவு போன்ற தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் துல்லியமாக சரிபார்க்க வேண்டும் . அரசின் விலையில்லா நலத்திட்டங்கள் வழங்குவதற்கு மேற்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும் . அவ்வாறு இணையதள பதிவுகள் வாயிலாக சரிபாக்கும்போது போலியான மாணவர்கள் எண்ணிக்கை கண்டறியப்பட்டால் போலியாக கணக்கிடப்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா நலதிட்டங்கள் பெற்றதற்கு அப்பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது 

PDF

Touch Here

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES